சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய மத்திய அரசு எடுத்த போர் நிறுத்த உடன்படிக்கைக்கு வைகோ அவர்கள் ஆதரவு வழங்கவில்லை அதனாலேயே போர் நிநுத்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்த செய்திக்கு வைகே அவர்கள் கடும் கண்டணத்தோடு மறுப்பறிக்கை ஒன்றை இணையங்களுக்கு வழங்கியுள்ளார்.
நான் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு இந்திய மத்திய அரசோடு பெரும் போராட்டங்களை மேற்கொண்டேன் கே.பி என் மீது அபாண்டாக குற்றச்சாட்டை முன்னவைக்கின்றார் இது கண்டணத்திற்கு உரியது. கே.பி தற்போது இந்திய இலங்கை உளவுத்துறையின் கீழ் இயங்குவது உலகறிந்தது. முன்பு காஸ்பரை வைத்து என் மீது அவதூறு வீசினார்கள் இப்போது கே.பியை வைத்து என் மீது வீண் பழி சுமத்துகின்றார்கள்.