தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு
ASSOCIATON ARTS ET CULTURES DES TAMOULS – France
லெப் கேணல் தவம் குறும்படவிழா 2010
போட்டி முடிவுகள்
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு லெப்;. கேணல் தவம் நினைவாக 2வது தடவையாக நடாத்திய குறும்படவிழா 28.08.10 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படங்களுக்கும் பங்கு பற்றலுக்கான தவம் குறும்படவிழா நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் படங்களில் பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்பட்ட சிறப்புப் பரிசுகள் விபரம்.
சிறந்த நடிகர் - இ. ரமணன் கலாச்சாரம்
சிறந்த நடிகை – யு.சு. பொபிதா எனக்கும் உனக்கும்
சிறந்த ஒளிப்பதிவு – க.கவிநாத் எனக்கும் உனக்கும்
சிறந்த படத்தொகுப்பு – ஆ.குணா அம்மணம்
சிறந்த இயக்குநர்- ம. பாஸ்கர் எனக்கும் உனக்கும்
சிறந்த இசை – சாரு அம்மணம்
சிறந்த குழந்தை நடிகை– éவுக்குள்
சிறப்பு நடுவர் விருதுகள் – 01. தசாவதாரம் அனிமேசன் படத்திற்காக
திருமதி. ஸ்ரெலின்குமார் பகீரதி
02. Droits de l' homme ஆவணப்படத்திற்காக
து. சதீஸ்
இவ்வாண்டு தவம் குறும்படவிழாவில் சிறப்பு நிகழ்வாக பவளவிழா காணும் மூத்த கலைஞர் திரு.ஏ.ரகுநாதன் அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்"
விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. ஈழத்தமிழ் சினிமாத் துறையின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை இத்துறையில் அவர்செய்து வரும் அனைத்து பணிகளுக்கும் மதிப்பளித்து இவ் உயர்விருதினை தமிழர் கலைபண்பாட்டு கழகம் பிரான்சு வழங்கியது.
சிறந்த 3வது படமாக கலாச்சாரம் (பிரான்சு) இயக்குநர் இ. ரமணன்
லெப் கேணல் தவம் குறும்படவிழா 2010 இன் சிறந்த படமாக
ம.பாஸ்கர் இயக்கிய எனக்கும் உனக்கும் குறும்படம் (பிரான்சு)
தெரிவு செய்யப்பட்டது.
சிறந்த 2வது படமாக தெரிவு செய்யப்பட்டிருந்த படமானது, சர்வதேச திரைப்படவிழாக்களில் பின்பற்றப்படும் அடிப்படை விதிகளை மீறியுள்ளமையால் அப்படத்திற்கு எம்மால் வழங்கப்பட்ட பரிசுகள் செல்லுபடி அற்றது என்பதை அறியத்தருகின்றோம்.