முகப்பு   தேசியம்   மக்கள் அவலம்   வரலாறு   கட்டுரைகள்   எம்மைப்பற்றி   தொடர்புக்கு
 
         
                                                             

              எம்மைப்பற்றி

      அன்பார்ந்த தமிழீழ மக்களே.

      எமது தமிழீழ தேசத்தில் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது உலகெங்கும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு அடித்தளமிட்டவர்கள் பிரித்தானிய இளையோர்கள் என்றால் அது மிகையாகாது.

      மக்களுடைய பேராதரவுடன் புரட்சி படைத்த போராட்டங்களின் தூன்களாகத் திகழ்ந்து மாணவர்களும் இளையோரும் உலகம் முளுவதும் மாபெரும் சக்தியாய் அணி திரண்டவர்கள்.

      பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி பிரித்தானியா ஏற்பாட்டாளர்களால் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. எப்பொழுதும் ஊர்வலம் வருவதும் பிரித்தானியக்கொடிகளை அசைத்துவிட்டு மனுவொன்றைக் கொடுப்பதுமாகவே பல போராட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டடன.

      எமது மக்கள் கொன்று குவிக்கப்படும் இந்தவேளையிலும் இதே முறையை தொடரமுடியாதென முறன்பட்ட பல இளையோர்களும் மாணவர்களும் திடீரென வீதி மறியல்களில் ஈடுபட்டனர் இவர்களுக்கு பல ஆயிரம் மக்களும் பலத்த ஆதரவு வழங்கினார்கள்.உடனடி போர் நிறுத்தம் கோரி வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அதன் பின்பு போர் மேலும் உக்கிரம் அடைந்தபோது ஏப்ரல் மாதம் 6ம் திகதி மீண்டும் மக்களுடன் இணைந்து மாபெரும் வீதி மறியலில் ஈடுபட்டனர் இதில் பல அமைப்புகளையும் சார்ந்த இளையோர்களும் மாணவர்களும் எழுச்சியுடன் ஈடுபட்டனர்.

      மறியலின் நோக்கம் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்து போர் நிறுத்தம் வரவேண்டும் என்பதே அன்றி வேறு நோக்கம் எம்மிடம் இருக்கவில்லை. 6ம் திகதி ஆரம்பமாகிய வீதி மறியல் மறுநாள் 07.04.2009 காலை சுமார் 7 மணிவரை தொடர்ந்தது. பிரித்தானிய காவல்துறையின் நெருக்குதல் காரணமாக பாராளுமன்ற சதுக்கத்திற்கு தள்ளப்பட்டோம்.

      மிக உக்கிரமான அந்த போராட்டம் தளர்வடைய தொடங்கியது ஆனால் அந்த போராட்டம் பிரித்தானியாவின் வரலாற்றில் நிலைக்கப்போவதையும் மேலும் 72 நாட்கள் நீடிக்கப்போவதை நாங்கள் உணர்ந்திருக்கவில்லை.

      7ம் திகதி சிவதர்சன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதமே அதற்கு காரணமாக அமைந்தது. அவர்களின் முடிவுக்குப் பின் மேலும் பலர் உண்ணாநிலை மேற்கெண்டார்கள். இந்த போராட்டத்திற்கு பல தமிழ் அமைப்புகள் ஆதரவுகள் வழங்கி உதவிகள் பல செய்தனர். பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் போராட்டத்தை 73 நாட்கள் தொடர பேர்சொல்லக்தக்க சில இளையோர்களே அயராது பாடுபட்டனர்.

      இந்த போராட்டத்தை நிறுத்த எம்மவர்கள் என்று சொல்லும் பலர் ஈடுபட்டனர். அனைத்தையும் தாண்டியே அந்த போராட்டத்தை நடாத்தி முடிக்கப்பட்டது. உண்மையில் யாரும் அந்த போராட்டத்திற்கு உரிமை கோர முடியாது {நாம் உட்பட}. ஏனெனில் அது இளையோர்களாளும் மக்களாளும் நடாத்தப்பட்ட போராட்டம்.

      தமிழீழ திருநாட்டை கட்டியெழுப்ப இளையோர்களினதும் மாணவர்களினதும் மக்களினதும் ஒருங்கிணைந்த புரட்சியே நிச்சயமாக எம் விடுதலைக்குப் பலம் சேர்க்கும் என்று உறுதியாக நம்புகின்றவர்கள் நாங்கள். தேசியம் சுயநிர்ணயம் தன்னாட்சி ஆகிய மூலப்பொருளுடன் பயணிப்பவர்களே நாங்கள்.

      சுய விருப்பு வெறுப்புகளை புரம் தள்ளி புதிய புரட்சிப் பாதையை வழிவகுத்து நான் பெரிது நீ பெரிது என்று வாழாது நாடு பெரிது என்று வாழ விரும்புகிறவர்களே நாங்கள்.

      தேசத்தை மீட்டு எமது சுதந்திரத்தை நிலைநாட்ட உங்களையம் உரிமையோடு அழைக்கின்றோம்

       
           
       
                 

            எமது நோக்கம்

        தமிழீழம் எமது தமிழ் மக்களின் தேசம்.

        எமது மண் சிங்கள பேரினவாத அரசால் இப்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பும் கொலைகளும் கற்பழிப்புக்களும் சிறைச்சேதமும் சிங்கள பேரினவாத அரச இராணுவத்தால் தொடர்ந்தும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

        உலகின் எந்த ஒரு இனமும் கண்டிராத துயரையும் இழப்பையும் எமது தேசமும் மக்களும் கண்டிருக்கிறார்கள்.40ஆயிரத்திற்கும் நெருக்கமான எமது தேசத்தின் விடுதலையை நெஞ்சினில் சுமந்த மாவீரர்கள் விதையாகிப்போனார்கள்.

        அளப்பரிய அர்ப்பணிப்புக்களைப் புரிந்த இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்கள் தம் இன்னுயிர்களை இழந்து புதைகுழியினில் சிங்கள பேரினவாத அரசால் புதைக்கப்பட்டார்கள்.

        தாம் நேசித்த தாயை, தந்தையை. சகோதரனை, சகோதரியை, கணவனை, பிள்ளைகளை இழந்த இலட்சக்கனக்கான எமது உறவுகள் இன்றும் சொல்லெனாத் துயரினில் இன்றும் நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

        பிறந்த நாள் முதல் துயரையும் இழப்பையும் மட்டுமே கானும் சபிக்கப்பட்ட இனமாக தமிழினத்தை துரோகிகளோடு இணைந்து சிங்கள பேரினவாத அரசு மாற்றிவிட்டது. தேசத்தை இழந்தோம் மாவீர்களை இழந்தோம் மக்களை இழந்தோம் உடமை இழந்தோம் கடைசியில் உரிமையும் இழந்தோம். உறவுகளே இழந்தவைகளை மனதிற் பதித்து.

        தமிழீழத்தின் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஒருவரே என்றும் எம் தலைவர் என்பதையும்,

        தமிழ் மக்களின் ஏகோபித்த அபிலாசை தனித்தமிழீழமே.

        அக்கொள்கையில் பற்றுறிதியுடனிருக்கும், தமிழீழ விடுதலைப்ப்லிகளே தமிழீழமக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதையும்,

        சுதந்திர தனித் தமிழீழமே தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதையும் ஏற்று,

        எமது தேசிய கொடியின் கீழ் அணிதிரண்டு தம் இன்னுயிர்களையும் ஈகம் செய்த மாவீரர்களின் தியாகத்தையும்,

        அளப்பரிய அர்ப்பணிப்புகளையும் செய்த மக்களையும் மனதில் நிறுத்தி,

        தமிழீழத்தின் விடுதலைக்காய் சிதறிக்கிடக்கும் மாணவர்களையும்.இளையோர்களையும், முழு வீச்சோடு இணைத்து எமது விடுதலைப் போராட்டத்தை புதிய வடிவங்களில் முன்னெடுத்துச் செல்வோம்..

        தமிழீழ வரலாற்றினையும், மாவீரர்களுடைய உன்னத தியாகங்களையும், எம் இளைய சந்ததியினருக்கு தெளிவு படுத்தி அதற்கேற்ப வரலாற்று பணியாற்றுவோம்..

        தினம் தினம் நம் உறவுகளை கொன்று குவித்த சிங்கள இனவாத அரசினையும் அதற்க்கு உந்துசக்தியாய் திகழ்ந்த நாடுகளையும் சர்வதேச மன்றதில் நிறுத்தப் பாடுபடுவோம்.

        இழந்த தேசத்தை மீட்டு உரிமைக்கு உயிர்கொடுத்து எமது தேசத்தின் கொடியேந்தி எமது மாவீரர்களின் கனவும் எமது மக்களின் கனவும் நிறைவேறும்வரை எமது உயிரையும் இழக்கும்வரை உழைப்போம்.

        இந்த தலைமுறையே தமிழீழத்தை கானச்செய்ய அயராது எவ்வித இடர்கள் வரினும் விலைபோகாத எமது மாவீரர்களின் வழி நின்று எமது தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில் பயணித்து தேசத்தின் விடிவிற்காகவும் மக்களுக்காகவும் உழைப்போம் என உறுதியெடுக்கின்றோம்.. இதுவே எமது நோக்கமுமாகும்.

         
             
         
         
         
           
         
        Copyright (c) 2010 rste.org. All rights reserved.