தமிழ் மற்றும் பல பொது கனடிய சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பாகிய தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்புக் குழுவானது (Tamil Refugee Coordinating Committee -TRCC) 492 தமிழ் அகதிகளின்; மனிதாபிமான தேவைகளிற்காக உடனடி நடவடீக்கைகளை எடுத்துள்ளது.
தடுப்பு முகாமிலுள்ள அகதிகளின் உடனடித் தேவைகளைக் கவனிக்கும் பொருட்டு TRCC தனது பிரதிநிதிகள் குழுவை Vancouver B.C ற்கு அனுப்பியுள்ளது.
“கப்பல் வந்தடைந்த 24 மணி நேரத்திற்குள் 50 பெட்டிகளுக்கும் மேலான அகதிகளுக்குத் தேவையான பொருட்களைச் சேர்க்க எங்களால் முடிந்துள்ளது.” என TRCC ஜச் சேர்ந்த தர்ஷிகா செல்வசிவம் குறிப்பிட்டுள்ளார்.
TRCC இன் தொண்டர்கள் இவற்றை உள்ளூர் தமிழ் வியாபார நிறுவனங்களிடமிருந்து சேகரித்துக் கொண்டிருக்கின்றார்கள். “நாங்கள் தொடர்ந்தும் அகதிகளின் உடனடித் தேவைகளைத் தீர்ப்பதிலும் குடும்பங்களை ஒன்று சேர்ப்பதிலும் கவனம் செலுத்தி இடைவிடாது வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஒரு சட்ட பாதுகாப்பு குழுவும் கனடிய அதிகாரிகளுடன் இணைந்து முதல் நாளிலிருந்கே அகதிகளின் உடனடிச் சட்ட ரீதியிலான தேவைகளை கவனித்துக்கொண்டிருக்கின்றது.” ஏன மனித உரிமைகளிற்கும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்குமான மையத்தினைச் சேர்ந்த அன்ரன் பிலிப் சின்னராசா குறிப்பிட்டார்.
“இன்றும் இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் பிரச்சினையாலும் தொடரும் வன்முறைகளாலுமே தமிழர் அகதியந்தஸ்து கோருகிறார்கள். இலங்கை அரசாங்கம் போரை வென்று விட்டதாக உரிமை கோரிய நாளிலிருந்து, இன்றுவரை தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஒரு பெரும் மக்கள் தொகையை நாட்டிலிருந்து வெளியேற்றிய பயமுறுத்தும்;; பிரச்சாரத்தையும் அரச வன்முறையையுமே தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றது.” என குடிவரவு மற்றும் அகதிகளுக்கான சட்டவாளர் Lorne Waldman அவர்களும் சட்டத்துறைப் பேராசிரியர் Audrey Macklin அவர்களும் தெரிவித்துள்ளார்கள்.
“சர்வதேச மன்னிப்புச்சபையின் மனித உரிமைகள் கவனிப்பகமும் ஆபத்துகள் குறித்த சர்வதே அமைப்பும் இலங்கை அரசாங்கத்தின் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் குற்றச் சாட்டியுள்ளன.” எனவும் “தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கனடிய அரசாங்கத்தின் தார்மீக உரிமைகளை நாங்கள் ஏற்;றுக் கொள்கிறோம். அதே நேரத்தில், இந்த அகதிகள் ஒரு உள்நாட்டுப் போரிலிருந்து தப்பி வந்தவர்கள் என்பதால்; அவர்களை கருணையுடன் கவனிக்க வேண்டும் என்பதையும் அரசாங்கத்திடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம்.” எனவும் கனடிய தமிழர் தேசிய அவையின் (NCCT) பேச்சாளரான கிருஸ்ணா சரவணமுத்து குறிப்பிட்டுள்ளர்.
தமிழ் அகதிகளுக்கு உதவி செய்யும் மற்றொரு அமைப்பான கனடிய மனித உரிமைக்கான குரல் ( CHRV) எனும் அமைப்பின் Todd Ross என்பவர் “இந்த அகதிகள் தமது சொந்த அரச வன்முறையிலிருந்து தப்பியவர்கள். இதைக்கருதுமிடத்து, இலங்கை அரசாங்கத்தின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஏற்கப்பட்டு அகதியந்தஸ்து வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் குறித்தும் அரசாங்கம் மறந்து விடக் கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
TRCC ஆனது, தமிழ் அகதிகளின் மனிதாபிமான, சட்ட ரீதியான உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து கூட்டாக வேலை செய்து கொண்டிருக்கின்றது.
மேலதிக தொடர்புகளுக்கோ அல்லது நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கோ பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்:
Darshika Selvasivam - Tamil Refugee Coordinating Committee: 416-841-8277
Anton Philip Sinnarasa – Centre for War Victims and Human Rights: 416-300-7026
Todd Ross – Canadian Human Rights Voice: 416-505-4740
Krisna Saravanamuttu- National Council of Canadian Tamils: 647-448-0576
தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்புக் குழுவானது தமிழ் மற்றும் பல பொது கனடிய சமூக அமைப்புகள் சேர்ந்து தமிழ் அகதிகளின் மனிதாபிமான தேவைகளை கவனிப்பதற்காக உருவாக்கிய ஒரு பொதுவான கூட்டமைப்பாகும்